ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செல்லும் பயணிகளுக்கான குலுக்கல் தேர்வு இன்று சென்னை புதுக் கல்லூரியில் நடைபெறுகிறது

தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ஹஜ் கமிட்டி மூலம் விண்ணப்பித்த பயணிகள், சென்னை புதுக் கல்லூரி அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குலுக்கல் முறையில் இன்று 17.03.17 தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2017-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கு சுமார் 13 ஆயிரத்து 584 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது. அதில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஹஜ் பயணிகளை குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று மாநில ஹஜ் குழுவை, இந்திய ஹஜ் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, ஹஜ் பயணிகளை குலுக்கல் முறையின் வாயிலாக இன்று தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் உள்ள ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஹஜ் பயணிகள் இந்த குலுக்கலில் பங்கேற்று வருகின்றனர்.

தகவல் : சகோதரர். ஹுசைன் பாஷா – பிளாக் அண்ட் வொயிட் இன்டர்நேஷனல் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்