துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர் கைது – 10,000 திர்ஹம் வரை அபராதம்

ஐக்கிய அரபு அமீரகத்தை சர்ந்த ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு உயிருள்ள பூனையை உணவளித்ததை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதியேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

பூனையை உயிரோடு கூண்டில் அடைத்து தன் வளர்ப்பு நாய்களுக்கு உணவளித்ததை நண்பர்கள் படம் பிடித்தது போல் இடம் பெற்ற காட்சிகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியது பொதுமக்கள்  மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அமீரக இணைய குற்றவியல் துறை (Cyber Crime Department ) துபாய் காவல் துறை உதவியுடன் விசாரனை செய்து குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபரையும், வீடியோ எடுக்க உதவியாக இருந்த இருவரையும் காவல்துறை கைது செய்தது.

இது போன்ற காட்டு மிராண்டித்தனமான செயல்களை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை என்றும் மிருகங்களிடத்தில் அன்பும், பரிவும் காட்ட வேண்டும் என்றும் அமீரக அதிகாரி அல் மன்சூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

சட்டப்பிரிவு 432 இன் கீழ், மிருகங்களை சித்திரவதை செய்யும் குற்றங்களுக்காக துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 10,000 திர்ஹம் வரை அபராதம் வழங்கப்படும் என்றும்  அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..