கீழக்கரை தாலுகா சமூக நல திட்ட அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் அரசின் நலத் திட்டங்கள் – தாசில்தார் தமீம் ராசா தகவல்

இராமநாதபுரம் மாவட்ட  வருவாய்த்துறை அறிவுறுத்தலின் படி கீழக்கரை தாலுகாவில் சமூக நல திட்ட அலுவலகத்தின் மூலமாக முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம்,

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் உதவி பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகளுக்கான தகவலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா நம்மிடையே பகிர்ந்துள்ளார். இது குறித்த மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் கீழக்கரை தாலுகாவில் இயங்கும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். 

To Download Keelainews Android Application – Click on the Image