ஜாமீன் வேண்டுமா..? 100 கருவேல மரங்களை வேரோடு வெட்ட வேண்டும் – அரியலூர் நீதிமன்றம் அதிரடி

நம் மண்ணின் வளத்தை நாசமாக்கி உபயோகமற்றதாக மாற்றும் இந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் பல தன்னார்வ நிறுவனங்கள் பெரும் முயற்சியை எடுத்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், ஆசிரிய பெருமக்களும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் நீதிமன்றம் இன்று இது தொடர்பாக ஜாமீனில் வெளியே வருபவர்களுக்கு புதிய நிபந்தனை ஒன்றை அறிவித்துள்ளது.

இனி ஜாமீனில் வெளியே வருபவர்கள் அவர்கள் வெளிவரும் நாளில் இருந்து 20 நாட்களுக்கு 100 சீமக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அரியலூர் நீதிமன்ற நீதிபதி கூறும்போது, இவ்வாறு கருவேல மரங்களை நீக்கிய பிறகு அதற்கான சான்றிதழை விஏஓவிடம் சமர்பித்து ஓப்புதல் வாங்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இந்த புதுவகையான நிபந்தனையை அரியலூர் மாவட்ட நீதிபதி ஏ.கே.ஏ ரஹ்மான் பிறப்பித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..