மீண்டும் வாலிபால் போட்டியில் முதல் பரிசு வென்று அசத்திய கீழக்கரை இளைஞர்கள் …

கடந்த (12-03-17) அன்று R.புதுப்பட்டினம், அல் அமின் இளைஞர் பேரவையின் சார்பாக முதலாம் ஆண்டு  மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது.  இப்போட்டியில் மீண்டும் முதல் பரிசாக ₹.8000/- வென்று கீழக்கரை இளைஞர்கள் அசத்தியுள்ளார்கள்.

முதல் பரிசை கீழக்கரை அணியினர், இரண்டாம் பரிசை R.புதுப்பட்டின அணியினர், மூன்றாம் பரிசை கீரமங்கலம் அணியினர் மற்றும் நான்காம் பரிசை சித்தார்கோட்டை அணியினர் வென்றுள்ளனர்.

தொடர் வெற்றி வாகை சூடும் கீழக்கரை இளைஞர்களை கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.