ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் எழுச்சியுடன் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 70ம் ஆண்டு நிறுவன தின சிறப்பு நிகழ்ச்சி..

அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் எழுச்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70 வது ஆண்டு நிறுவன தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (10-03-2017) அன்று நடைபெற்றது.

அமீரக காயிதே மில்லத் பேரவையின் துணைத் தலைவர் காயல் நூஹு ஸாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை மாணவர் கீழக்கரை எச். முஹம்மது ஹாலித் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.

பேரவையின் மூத்த துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் முன்னிலை வகிக்க, துபை மண்டல மின்னணு ஊடகப்பிரிவு செயலாளரும், துபை மண்டல துணைச் செயலாளருமான வடக்கு மாங்குடி முஹம்மது சலீம் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

பேரவையின் ஷார்ஜா மண்டல இணைச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்த, அஜ்மான் மண்டலச் செயலாளர் அஞ்சுகோட்டை எம்.எஸ். அப்துர் ரஸாக் துவக்கவுரையாற்றினார்.

மேலும் மார்க்கத்துறைச் செயலாளர் காயல் மௌலானா ஸுலைமான் மஹ்ழரி, அபுதாபி மண்டல ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் காயல் மௌலானா ஹுசைன் மக்கி மஹ்ழரி, அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, துபை & வடக்கு அமீரகங்கள் மண்டல அமைப்புச் செயலாளர் புளியங்குடி மௌலானா அபுசாலிஹ் பிலாலி, அல் அய்ன் மண்டல அமைப்புச் செயலாளர் லால்பேட்டை மௌலானா அமீனுல் ஹுசைன் மன்பஈ, அபுதாபி மண்டல கொள்கை பரப்புச் செயலாளர் கொள்ளுமேடு சிராஜுத்தீன் மன்பஈ, ராஸ் அல் கைமா மண்டலச் செயலாளர் கீழை ஃபஹ்ருல் பயாஸ், துபை & வடக்கு அமீரங்கள் மண்டல ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன், அஜ்மான் அல் ஜர்ஃப் பகுதி செயலாளர் காயல் ஜெஸிமுத்தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

துணைப் பொதுச்செயலாளரும், துபை மண்டலச் செயலாளருமான இராமநாதபுரம் பரக்கத்அலி கருத்தரங்க நிறைவுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து பேரவையின் புரவலர் அய்யம்பேட்டை வாலன் ஜெய்லான் பாட்ஷா, அமீரக தமிழ் மன்றத்தின் தலைவர் அஜ்மான் மூர்த்தி, பேரவையின் புரவலர்கள் கோவிந்தக்குடி இஸ்மாயில், சிங்கப்பூர் ஹவுஸ் அதிபர் ஆயங்குடி அப்துல் மாலிக், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா பஷீர் சேட் ஆலிம் மன்பஈ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

பேரவையின் அபுதாபி மண்டல ஊடகம் மற்றும் சமூக நலத்துறைச் செயலாளர் லால்பேட்டை சல்மான் “தாய்ச்சபை தலைவர்களின் தியாக வரலாறு” என்கிற தலைப்பில் பேருரை நிகழ்த்தினார்.

பேரவையின் பொதுச்செயலாளர் கீழை எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான் “முஸ்லிம் லீக் எவற்றை எல்லாம் செய்யவில்லை? என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

ஷார்ஜா மண்டலச் செயலாளர் அய்யம்பேட்டை பாட்ஷா கனி நன்றியுரை நிகழ்த்த, மார்க்கத் துறை துணைச் செயலாளர் பெரியபட்டினம் மௌலானா ஷர்ஃபுத்தீன் மன்பஈ துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களைப் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஷார்ஜா – அஜ்மான் மண்டல நிர்வாகிகள், பொதுச்செயலாளர் & துணைப் பொதுச்செயலாளர் ஒருங்கிணைப்பில் , சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் அமீரகம் வாழ் அனைத்து ஊர் ஜமாஅத்தினர், அமீரக காயிதே மில்லத் பேரவையின் அனைத்து மண்டல – பகுதி – துறை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், உலமா பெருமக்கள், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..