புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்

இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம்.

அந்த சுற்றறிக்கையில் மொத்த இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17,22,45,311 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சேர்த்து, யூனியன் பிரதேசங்கள் உள்பட புனித ஹஜ் பயணத்திற்கான இந்த வருடத்திற்கான மொத்த இட ஒதுக்கீடு 1,23,700 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் தமிகத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 42,29,479 ஆகும். தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 2017 ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,588 என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்துக்கான ஹஜ் பயண இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 3,189 ஹஜ் பயணிகள் மட்டுமே புனித பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 10399 விண்ணப்பங்கள் மேலதிகமாக ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் : கீழை நியூஸுக்காக மக்காவில் இருந்து கீழை இர்பான்- பிளாக் அண்ட் ஒயிட் இன்டர்நேஷனல் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..