இளைஞர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க வேண்டும் – இந்திய கப்பற்படை முன்னாள் கமாண்டோ செய்யது ஹமீதா கலை கல்லூரியில் சிறப்புரை

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 10.03.17 விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ஏ. வைத்தியநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில் “இந்திய அளவில் இளைஞர்களுக்கும் கல்லூரி காலத்தில் பயிலும் விளையாட்டில் ஆர்வம் மற்றும் அதிக ஈடுபாடு கொண்ட மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்புத் துறைகளில் அதிக வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

மாணவ மாணவியர் அனைவரும் படிப்பில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் விளையாட்டுத் துறைகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதிக்க மனவலிமை ஒன்றே போதும் அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த மாரியப்பன் அவர்கள் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அவரிடம் உள்ள மனோதிடம் தான் அவரை மாபெரும் சாதனையாளராக உயர்த்தியது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..