கீழக்கரை அல்பய்யினா அகாடமியில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கல்வியில் பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பு – ஆர்வமுடைய பெண்களுக்கு அழைப்பு

கீழக்கரை கிழக்குத் தெருவில் கடந்த ஆண்டு முதல் அல்பய்யினா அகாடமி துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த அகாடமியில் சென்னை பல்கலை கழகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பாடத் திட்டங்களின் அடிப்படையில் அரபி இஸ்லாமிய கல்வியில் பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.

இது குறித்து அல்பய்யினா அகாடமியின் தாளாளர் ஜாபிர் சுலைமான் கூறுகையில் ”நம் சமுதாயத்தில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கும் பெண் மக்களுக்காக, இந்த மேற்படிப்பு துவங்கப்பட்டு உள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியிலும் பாடங்கள், தேர்ந்த ஆசிரிய பெருமக்களால் பயிற்றுவிக்கப்படுவதோடு, இங்கேயே தேர்வுகள் எழுத சென்னை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழக பாடத் திட்டத்தின் படி இங்கு தப்ஸீர், ஹதீஸ், அரபி இலக்கண இலக்கியங்கள், மார்க்க சட்டங்கள் மற்றும் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

தற்போது இதற்கான அட்மிஷன் நடைபெறுகிறது. ஆர்வமுடைய பெண்கள் இந்த படிப்பில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

1 Comment

  1. அல்ஹம்ந்துலில்லாஹ்.. நம் சமுதாயத்துக்கு இது போன்ற பயிலகங்கள் அவசியம் தேவை..

Comments are closed.