கீழக்கரையில் தாலுகா மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் செயலிழந்ததாக குற்றச்சாட்டு – ‘நாம் தமிழர்’ கட்சியினர் நகர் முழுவதும் சுவரொட்டி

கீழக்கரை தாலுகாவில் அரசு பொது மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் செயலிழந்து இருப்பதாக குற்றம் சாட்டி கீழக்கரை நகர் நாம் தமிழர் கட்சியினர் நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

அதில் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால் செவிலியர்களே மருத்துவம் பார்க்கும் அவல நிலை உள்ளதாகவும், சுகாதாரமற்ற நிலையில் மருத்துவமனை இருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அதே போல் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் தாங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கோரி, மனுக்கள் வாயிலாக பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக கொடுத்தாலும், அந்த மனுக்கள் மீது எவ்வித தீர்வும் காணப்படாமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..