Home செய்திகள்கீழக்கரை செய்திகள் துபாயில் 6 மாதத்துக்குள் வேலை விசாவை ரத்து செய்தால் ‘ஃப்ரி ஜோன்’ கம்பெனிகளில் பணியில் சேர முடியுமா.? – சட்ட நிபுணர்கள் விளக்கம்

துபாயில் 6 மாதத்துக்குள் வேலை விசாவை ரத்து செய்தால் ‘ஃப்ரி ஜோன்’ கம்பெனிகளில் பணியில் சேர முடியுமா.? – சட்ட நிபுணர்கள் விளக்கம்

by Mohamed

துபாயில் சிறப்பு மண்டலம் (Free Zone) அல்லாத கம்பெனியில் வேலைக்காக சேர்ந்த 6 மாதத்திற்குள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். பிறகு அவருடைய நன்னடத்தை காரணமாக வேறு கம்பெனியில் பணியில் சேருவதற்கு தடையில்லா சான்றுதலும் (NOC) வழங்கப்படுகிறது.

இரண்டு வாரத்தில் சிறப்பு மண்டலத்தில் (Free Zone) உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்ததை தொடர்ந்து, அந்த வங்கி விசாவுக்கு விண்ணப்பம் செய்கிறது. அவருக்கு விசா வழங்க தொழிளாலர் அமைச்சகம் (Ministry of Labour) மறுத்ததால், சம்பந்தப்பட்ட நபர் தொழிலாளர் அமைச்சகத்தில் தடை குறித்து விசாரிக்கும் போது 5 மாதத்தில் விசாவை ரத்து செய்ததால் ஒரு வருடம் வேலை செய்ய தடை (Employment Ban) உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருவர் பணி விசாவை 6 மாத கால கட்டத்திற்குள் ரத்து செய்யும் பட்சத்தில் அமீரகத்தில் பணியை தொடர ஒரு வருடத்திற்கு தடை விதிக்கப்படுவதால் சிறப்பு மண்டலங்களில் (Free Zone) உள்ள ஸ்தாபனங்களில் வேலை கிடைத்தாலும், குறிப்பிட்ட கல்வி தகுதியோடு கூடிய சம்பளத்தை பெறவில்லையென்றால் விசாவுக்கு அனுமதி கிடைக்காது என்றும், வேலைவாய்ப்பு தடையிலிருந்து தப்பித்துக்கொள்ள குறைந்த பட்சம் 6 மாதம் பணியில் இருத்தல் வேண்டும் என்று தொழிலாளர் சட்ட நிபுணர்கள்  அறிவுறுத்துகிறார்கள்.

புதிய பொறுப்புகளில் பணியை தொடரும் பட்டதாரியாக இருக்கும் முதல் நிலை தொழில் வல்லுனர்கள்(சம்பளம்: AED.12,000), இரண்டாம் நிலை தொழில் வல்லுனர்கள் (சம்பளம்: AED.7000) & மூன்றாம் நிலை தொழில் வல்லுனர்கள் (சம்பளம்: AED.5000) மீதுள்ள தடையை நீக்க முறையான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் சமர்பிக்கும் பட்சத்தில் தடையில் இருந்து விலக்கிக்கொள்ள முடியும்.

1991 ஆண்டின் சட்டவிதி 2, அமைச்சரின் ஆனை எண் # 13 படி ஒரு கம்பெனியில் இருந்து வேறு நிறுவனத்திற்கு தடையின்றி பணி மாற்றம் செய்து கொள்ள குறிப்பிட்ட வல்லுனர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்ட பட்டியல் பின் வருமாறு:

1.பொறியாளர் 2.மருத்துவர்கள், செவிலியர்கள் & மருந்தாளர் 3.தகுதிபெற்ற கணக்காளர்கள் & தணிக்கையாளர்கள் 4.விவசாய வழிகாட்டிகள் 5.தகுதிபெற்ற நிர்வாக அதிகாரிகள் 6.கனரக வாகன ஓட்டிகள் 7.மின்னணு இயந்திரங்கள் (Electronic Equipment) மற்றும் ஆய்வகங்களை (laboratory)இயக்கும் தொழில் நுட்ப வல்லுனர்கள்

மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் இடம் பெறும் நபர்கள் வேலை வாய்ப்பு தடையிலிருந்து (Employment ban) விலக்கு பெற்றவர்கள் ஆகும்.

தடையில் வேலை வாய்ப்பு தடை (Employment Ban) & குடியேறல் தடை (Emigration Ban) என்று இரண்டு வகை உள்ளது. அதில் குடியேறல் தடை பெற்ற ஒருவரால் விசிட் விசாவில் கூட அமீரத்தில் நுழைய இயலாது. அதே சமயத்தில் வேலை வாய்ப்பு தடை பெற்ற ஒருவரால் விசிட் விசாவில் உள்ளே நுழைய முடியுமே தவிர தடைக்கான காலம் (ஆறு மாதம்/ ஒரு வருடம்) முடியும் வரை பணியில் சேர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!