கீழக்கரை தாலுகாவில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெண்மணி – சட்டப் போராளிகள் வாழ்த்து

கீழக்கரை தாலுகாவிற்கு புதிய வட்ட வழங்கல் அலுவலராக B உமா ராணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்னர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை வருவாய் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொறுப்பேற்றிருக்கும் இவரை இன்று 08.03.17 கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் சார்பாக நேரடியாக சந்தித்து வாழ்த்துக்கள் பகிரப்பட்டது.

கீழை நியூஸ் வலை தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ”கீழக்கரை நகருக்கு சிறந்த முறையில் பணியாற்ற காத்திருக்கிறேன். ரேஷன் பொருள்கள் சம்பந்தமாக அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் தகுந்த நேரத்தில் பின்பற்றி தேவையற்ற அலைச்சல்களை தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் மேலான ஒத்துழைப்பை தர வேண்டும்.” என்று தெரிவித்தார்.

கீழை நியூஸ் வலை தளம் சார்பாகவும் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் பெண்மணி உமாராணிக்கு இந்த மகளிர் தின நன்னாளில் அவர்களின் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

To Download Keelainews Android Application – Click on the Image