வங்கிகளில் இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து முறையான பதில் அளிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை உறுதி – வருமான வரித்துறை அறிவிப்பு

இந்திய அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பிற்கு பின்னர் வங்கிகளில் ஏகத்துக்கு இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தவர்கள் முறையான பதில் அளிக்காமல் தவறும் போது அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக வருமான வரித்துறை அலுவலகம் நேற்று 07.03.17 செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் தங்கள் கணக்கில், பெருந்தொகையை செலுத்தியவர்கள் அது குறித்து வருமான வரித் துறைக்கு http://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குள் சரியான பதில் அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி குறித்து ஆய்வு செய்ய வரும் அலுவலர்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்துகொள்ள, பொது மக்கள் அந்த அலுவலர்களின் அடையாள அட்டையை சரி பார்க்கவும். ஏதேனும் சந்தேகம் இருப்பின், வருமான வரித் துறை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித் துறை ஆணையருக்கான தொலைபேசி எண்கள்:

(நிர்வாகம் & டி.பி.எஸ்) –  044-28338653

மக்கள் தொடர்பு அலுவலர் – 044-28338314, 28338014