கீழக்கரையில் கராத்தே கலையில் கலக்கும் மாணவர்கள் – பியர்ல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ‘பிளாக் பெல்ட்’ கட்டா போட்டிகளில் வெற்றி வாகை

கீழக்கரை பியர்ல் மெட்ரிகுலேஷன் மேநிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்ட கராத்தே போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஜுனியர் லெவல் ‘பிளாக் பெல்ட்’ கட்டா, சிறுவர்களுக்கான கலர் பெல்ட் கட்டா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பல்வேறு தர வரிசைப்படி அமைந்துள்ள முறைப்படி கராத்தே பெல்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஷாஹிரா தலைமை ஏற்றிருந்தார். ஸ்டேட் லெவல் கிரேடு கராத்தே மாஸ்டர் கண்ணன், அபாகஸ் மாஸ் தலைவர் உமர் ஷரீப் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1 Comment

  1. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Comments are closed.