இனி 4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ.150 வரை வசூலிக்கப்படும் – தனியார் வங்கிகள் அறிவிப்பு

கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500, 1000 ரூபாய்க்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பண மதிப்பிழப்பு பிரச்சனைக்கு பிறகு பணப்புழக்கம் மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிகள் பரிவர்த்தணைகளுக்கு வசூலிக்கும் குறைந்தபட்ச அளவு கட்டணத்தை மீண்டும் வசூலிக்க தொடங்கியுள்ளது.

அதன் படி, ஒரு மாதத்திற்கு ஒருவர் தனது கணக்கில் 4 முறை மட்டுமே வங்கிகளுக்கு சேவை கட்டணம் ஏதும் செலுத்தாமல், பணத்தை வங்கிகளில் வைப்பு வைக்கலாம் அல்லது பணத்தை எடுக்கலாம். அதற்கு மேல் பரிவர்த்தணை மேற்கொள்ளும் ஒவ்வொரு கணக்குக்கும் குறைந்த பட்ச தொகை வசூலிக்கப்பட உள்ளது.

நான்காவது முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பணபரிவர்தனைக்கும் பணம் ரூ.150 வரை வசூலிக்கப்படும் என்று எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன. சேமிப்பு கணக்கு, சம்பள கணக்கு வைத்துள்ளவர்களும் 4 முறைக்கு மேல் பரிவர்த்தணை மேற்கொண்டால் இந்த பண வசூலிப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி, டிஜிட்டல் முறை பணபரிவர்த்தணையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..