Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய லேசான மழை பொழிவு

கீழக்கரையில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய லேசான மழை பொழிவு

by keelai

கீழக்கரையில் இன்று 03.03.17 அதிகாலை முதல் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய துவங்கியுள்ளது. அதிகாலை சுபுஹ் தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்ற இஸ்லாமிய மக்கள், தொடர் மழை பொழிவின் காரணமாக சற்று நேரம் பள்ளியிலேயே காத்திருந்து, மழை குறைந்ததும் வீடுகளுக்கு திரும்பினர். கீழக்கரை அதன் சுற்று வட்டாரங்களில் காலையில் வெயில் அடித்தது. பின்னர் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

ஆனால் மீண்டும்  தற்போது காலை 11 மணி நிலவரப்படி கீழக்கரை நகரில் இடியுடன் கூடிய மழை பொழிவு ஆரம்பித்துள்ளது. இதனால் எங்கும் குளுமை நிலவுகிறது. பொதுமக்கள் இதனால் ஆனந்தம் அடைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அறிவிப்பு செய்திருந்தது.

லட்சத்தீவு முதல் கர்நாடகம் வரை காற்றின் மேலடுக்கில் சாதகமான சூழல் உருவாகியுள்ளதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வுநிலை தற்போது சற்று நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலின் அருகில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!