Home கீழக்கரை மக்கள் களம்சட்டப்போராளிகள் நீச்சல் குளத்தை துரித நடவடிக்கை எடுத்து துப்புரவு செய்த நகராட்சி நண்பர்களுக்கு நன்றி – நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுகோள்

நீச்சல் குளத்தை துரித நடவடிக்கை எடுத்து துப்புரவு செய்த நகராட்சி நண்பர்களுக்கு நன்றி – நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுகோள்

by keelai

சின்னக்கடை தெருவில் கீழக்கரை நகராட்சி சார்பாக நீச்சல் குளம் என்கிற தலைப்பில் சற்று முன் நம் கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது குறித்து பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், சமூக ஆர்வலர்கள் பலர், இது சம்பந்தமான புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர்.

உடனடியாக கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் துரித முயற்சி எடுத்த சுகாதார மேற்பார்வையாளர் ஹாஜா உள்ளிட்ட நண்பர்களுக்கு கீழை நியூஸ் வலை தளம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே வேளையில் இது ஒரு தற்காலிக தீர்வு தான் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். இது போல் ஒவ்வொரு முறை சாரல் மழை பெய்யும் போதும் சக்கர் வாகனம் கொண்டு வந்து சாதனை செய்ய முடியாது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக உரிய முறையில் ஒப்பந்தப்படி இந்த பகுதியில் சின்னக்கடை தெரு சந்திப்பில் இருந்து சிந்துபாத் சிறப்பங்காடி வழியாக நடுத் தெரு சந்திப்பு வரை சாலையை அமைத்து தர வேண்டும்.

செய்வீர்களா..?   நீங்கள் செய்வீர்களா….?

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!