மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் – வருவாய் துறை சார்பாக தமீம் ராசா வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர். தமீம் ராசா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :

”இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு கிணறுகள் தோண்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் விபரங்கள் இணையதளத்தில் அதிகார பூர்வாமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு முன்பு, நிலத்தடி நீருக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைந்துள்ளதா என மத்திய அரசு வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்வதோடு, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கு மதிப்பளித்து, இந்த திட்டத்திற்கான ஆய்வு பணிகளை துவங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.