Home செய்திகள் சவூதி அரேபியாவில் களை கட்டும் ‘இலந்தை பழ சீசன்’ – பாலைவன பூமியில் விளையும் அற்புதம்

சவூதி அரேபியாவில் களை கட்டும் ‘இலந்தை பழ சீசன்’ – பாலைவன பூமியில் விளையும் அற்புதம்

by keelai

பாலைவன தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சுவைமிகு இலந்தை பழங்களின் சீசன் தற்போது துவங்கியுள்ளது. வறண்டு போன பாலை நிலத்தில் விளையும் இந்த இலந்தை பழங்களை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவனின் அருள் படர்ந்திருக்கும் இந்த புண்ணிய பூமியில் இதுவும் ஒரு அற்புதம் தான். தற்போது ரியாத் நகரின் வீதிகளில் விதவிதமான இலந்தை பழங்களின் ரகங்களை விறபனைக்கு வைத்துள்ளனர்.

அரபு ஷேக்குகள் விருப்பமாக சாப்பிடும் இந்த இலந்தை பழங்களை தங்கள் தோட்டங்களின் பெருமளவு மகசூல் செய்து வருகின்றனர். கல்கண்டு போன்ற தேன் சுவையோடு காய்த்து குலுங்கும் இந்த இலந்தை பழ மரங்களை, பேரித்தம் பழ மரங்களோடு சேர்த்து அரபு ஷேக்குமார்கள் தங்கள் இல்லங்களிலும் வளர்த்து வருவதோடு, முறையாக வலை போட்டு, பழங்கள் வீணாகாதவாறு பராமரித்தும் வருகின்றனர். பேரித்தம் பழங்களின் அறுவடை ஆகஸ்ட் மாதம் என்றால் இலந்தை பழங்களின் அறுவடை பிப்ரவரியில் துவங்குகிறது .

தகவல் : ரியாத் நகரிலிருந்து கீழை நியூஸுக்காக கீழை இனியவன் மன்சூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!