தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் அசத்தும் கீழக்கரை வாலிபர்கள்..

கீழக்கரையைச் சார்ந்த வாலிபர்கள் மீண்டும் வாலிபாலில் முதல் பரிசை வென்று அசத்தியுள்ளனர். இன்று (26-02-2017) ஜெகதை YCC & REAL ROCKERS அணியினரால் நடத்தப்பட்ட 6ம் ஆண்டு மாபெரும் வாலிபால் போட்டி ஜெகதாபட்டினத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரை அணியினர் முதல் பரிசாக 6000 ஆயிரம் மற்றும் கோப்பையை வென்றது.  மேலும் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பரிசினை உள்ளூர் அணி, வேலயாபுரம், காட்டுமாவடி அணியினர் முறையே வென்றனர்.

கீழக்கரை வாலிபர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெற்றி பெற்றதை பிரத்யேகமாக நம் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாலிபால் போட்டியில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் கீழக்கரை அணி…

தொடர் வெற்றிகளை பெற்று வரும் கீழக்கரை அணியினருக்கு கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, இனி வரும் காலங்களில் கீழக்கரை அணியினருக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய கீழை நியூஸ் நிர்வாகம் காத்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

1 Comment

Comments are closed.