சிறுவர்களுக்கு பைக் வாங்கி கொடுத்து ஆபத்தை வரவழைக்காதீர் – புது மடத்தில் ‘தவ்ஹீத் ஜமாஅத்’ சார்பாக விழிப்புணர்வு பேனர்

தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் மொத்த சாலை விபத்துகளில் 14.9 சதவீதம் தமிழகத்திலேயே நடைபெற்றுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இரு சக்கர வாகன விபத்துகள் அதிகரித்ததுள்ளது. இந்த சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் பெரும்பாலானோர் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் ஆவர். கீழக்கரை நகரில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட வாலிபர்கள் இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் புது மடத்தில் ‘தவ்ஹீத் ஜமாஅத்’ சார்பாக, விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் 18 வயதுக்கு முன்னதாக இரு சக்கர வாகனங்களை வாங்கி கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதை வாசிக்கும் சகோதரர்கள் முறையாக லைசன்ஸ் எடுத்து, போக்குவரத்து விதிகள் குறித்த போதிய விழிப்புணர்வும், கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வும் ஏற்பட்டாலேயே, சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும்.