இராமநாதபுரத்தில் செய்யதம்மாள் அறக்கட்டளை மற்றும் ‘மாற்றம் முன்னேற்றம்’ இளைஞர் பொது நல சங்கம் சமூக சேவை..

இன்று 26.02.2017 இராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த பகுதியினை செய்யது அம்மாள் அறக்கட்டளை மற்றும் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொதுநலச்சங்கத்தினர் சுத்தம் செய்தனர்.

பின்னர் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொது நலச்சங்கத்தின் தலைவர் பிரபு தலைமையில் வண்டிக்காரத்தெரு மற்றும் வண்டிக்காரப்பிள்ளையார் கோவில் தெரு சார்பில் மரங்கள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகபாஸ்கர், பாலா, கார்த்திக்,  சுரேஷ்மேத்தா, ராஜசேகரன், ஜெய்பாரத், சகுபர்சாதிக் ராஜேந்திரன், மாணிக்கம், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்களே …