கீழக்கரை 500 பிளாட் பகுதியில் சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றி விழிப்புணர்வு – மக்கள் நல பாதுகாப்பு கழகம் களமிறங்கியது.

தமிழகத்தில் நீர்நிலை ஆதாரத்திற்கு சவாலாக இருக்கும் சீமை கருவேல மரங்களை மாநிலம் முழுவதும் அகற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மார்ச் 31 ம் தேதிக்குள் முழுமையாக அகற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தனர். தமிழகத்தின் வறட்சி மாவட்டமாக இராமநாதபுரம் மாவட்டம் அறிவிக்கப்பட்டு நீர் ஆதாரம் இன்றி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலன் கருதி உயர்நீதிமன்ற உத்தரவை அமுல் படுத்துவதில் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் உறுதுணையாக இருக்க இப்பணி குறிப்பிட்ட காலகெடுக்குள் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மக்கள் நல பாதுகாப்பு கழகத்தினர் சீமை கருவேல மரங்களை அகற்ற அரிவாளோடு களமிறங்கியுள்ளனர்.

இன்று 26.02.17 மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் துணைத் தலைவர் மாணிக்கம் தலைமையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் நிர்வாகிகள் கீழக்கரை தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உள்பட்ட 500 பிளாட் பகுதியில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக கருவேல மரங்களை அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம் பொருளாளர், முகம்மது சாலிஹ் ஹூசைன் மக்கள் செய்தி தொடர்பாளர் முகம்மது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர் செய்யது முகம்மது பாதுஷா, அலையன்ஸ் சோசியல் சர்வீஸ் அமைப்பாளர் ஹபீப் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சீமை கருவேல மரங்களை வேரோடு வெட்டி அகற்றினர்.