கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சுற்றுபுற சூழல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது ..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 24-02-2017 அன்று தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு கல்லூரியின்ஆங்கிலத் துறை, நுண்ணுயில் துறை மற்றும் சுற்றுச்சூழல் குழுவுடன் இணைந்து The Hard Rain Project (UK) அமைப்பு சார்பாக The Whole World (முழு உலகம் ) என்ற கண்காட்சி Nature and Future (இயற்கையும் வருங்காலமும்) என்ற தலைப்பில் நடைபெற்றது.

இதில் பல கல்லூரி மற்றும் பள்ளியைச் சார்ந்த 1144க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். இக்கண்காட்சியில் Nature and Future (இயற்கையும் வருங்காலமும்) சார்ந்த விளக்க படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கல்லூரி மாணவிகளால் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கண்காட்சியில் மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சுற்று புற சூழலின் முக்கியத்துவம் மற்றும் அது மாசு படுவதனால் ஏற்படும் தீமைகளை ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொண்டார்கள்.

மேலும் இந்த கண்காட்சியை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பார்வையில் பட்ட மாசுப் பகுதியை படம் பிடித்து அதன் சம்பந்தமாக ஒரு பக்க கட்டுரை எழுத போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது, அதற்காக கலந்து கொண்ட 150 மாணவ மாணவிகளின் ஒரு பக்க கட்டுரைப் படைப்புகள் யாவும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல் சுற்றுப்புற சூழலில் அக்கறை கொண்டு முதலில் பதிவு செய்து கொண்ட பள்ளிகளுக்கு அதீத அக்கறைக்கான புள்ளிகளும் வழங்கப்பட்டது. இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக கலந்துகொண்ட அனைவரும் உலக வரை படத்தில் தங்களுடைய கைரேகைகளை பதித்துச் சென்றனர்.

கட்டுரைப்போட்டியில் முதல் மூன்று பரிசு பெற்றவர்களின் விபரங்கள் கீழே வருமாறு:-

VI to VIII வகுப்பு பிரிவில்..

S. Abdul Haris, VI Std. Arrahman International School, Madurai.

IX to XI வகுப்பு பிரிவில் ..

S. Rija Humaira, IX Islamiah Matriculation Higher Secondary School, Kilakarai.

Colleges பிரிவில்..

K. Indhuja, II Chemistry, Govt. Arts College for Women, Ramanathapuram

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..