’12 குழந்தைகள்’ இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போலோ அனுப்பப்பட்டனர் – ரோட்டரி சங்கத்தின் முயற்சிக்கு நன்றி

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் கடந்த வாரம் நாடார் பேட்டை மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இந்த முகாமில் கீழக்கரை உள்பட இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.

இதில் கீழக்கரை, திருவாடானை, தேவிபட்டினம், R .S மங்களம், R . காவனூர், உச்சிப்புளி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 12 குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சிறப்பான சேவையை செய்த கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தொண்டுள்ளம் கொண்ட நல்லுள்ளங்களுக்கும், சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் கீழை நியூஸ் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image