கீழக்கரையில் வேகமாக பரவும் ‘மலேரியா’ காய்ச்சல் – 100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கீழக்கரை நகரில் 100 க்கும் மேற்பட்டோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர். கீழக்கரை நகரில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தற்போது 12, 13, 14 ஆகிய வார்டுகளில் ஏராளமானோர் மலேரியா காய்ச்சல் பாதிப்பால் பொது மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

கீழக்கரையில் ஆங்காங்கே குப்பை மேடுகளும், கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பள்ளிகளுக்கும் மாணவர்களின் வருகை குறைந்துள்ளது. மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட பலர் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கீழக்கரை நகரின் பல்வேறு வார்டு பகுதிகளில் இருக்கும் குப்பைமேடுகளை நகராட்சி நிர்வாகம் அவசர அவசியம் கருதி உடனடியாக அகற்றக் கோரி நேற்று சட்டப் போராளிகள், மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..