Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் – அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு

கீழக்கரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் – அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு

by keelai

இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று 17.02.17 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கிழக்குத்தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் தலைவர் தமீமுதீன் தலைமையுரை ஆற்றினார். கழகத்தின் பொருளாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆசிரியை ஆபிதா பேகம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தன்னபிக்கை உரையாற்றினார். மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலருக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் தலைவர் தமீமுதீன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

மனித நேய விருதாளர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மாற்றுத் திறனாளிகளின் மகத்துவத்தையும், பெற்றோர்களின் கடமைகளையும் குறித்து சிறப்புரை பேசினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, மாவட்ட தொழில் மையத்தின் திட்ட அலுவலர் குணசேகரன், மகளிர் மேம்பாட்டு திட்ட மேலாளர் ராஜா முஹம்மது, தேசிய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தின் அலுவலர் இராஜசேகர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் கீழக்கரை மக்கள் களத்தின் பொருளாளர் ஜாபிர் சுலைமான் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த சிறப்பான விழா நிகழ்ச்சிகளை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளர் முகைதீன் இபுறாகீம் தொகுத்து வழங்கினார்.

இந்த பயனுள்ள முகாமில் மாற்றுதிறனாளிகளுக்கான அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, சிறு தொழில் உதவி, தனியார் வேலை வாய்ப்பு, மகளீர் சுய முன்னேற்றம் குறித்த அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது. மேலும் இந்த முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் பலருக்கு அவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!