கீழக்கரையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் செல்லும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் – காவல் துறை நடவடிக்கை

கீழக்கரையில் தொடர்ந்து வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு முழு முதற்காரணமாக இருப்பது விதி முறைகளை மீறி வாகனங்களை இயக்குவதும், இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு எவ்வித பயிற்சியும் இல்லாமல் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு வாகனங்களை ஓட்ட பெற்றோர்கள் அனுமதிப்பதும், லைசன்ஸ், இன்சூரன்ஸ் என்று முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வாகனம் ஓட்டுவதும் தான் விபத்துக்களுக்கு காரணமாகிறது.

இந்நிலையில் இன்று 17.02.17 கீழக்கரை காவல் துறை அதிகாரிகள் சப் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன், சப் இன்ஸ்பெக்டர் வசந்த் குமார் ஆகியோர்களின் தலைமையில் அதிரடி நடவடிக்கை எடுத்து சட்ட விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் இனி முறையாக சட்ட விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க அறிவுரையும் வழங்கினர். இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..