கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒருநாள் கருத்தரங்கம்.

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இந்திய வளங்களை சீராக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒருநாள் கருத்தரங்கம் 15-02-2017 அன்று நடைபெற்றது. கல்லூரி டீன் முனைவர் முகம்மது ஜஹாபர் தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரி ஆங்கிலத்துறை துணைப்பேராசிரியர் முனைவர் கௌரி மனோகரி வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சென்னை DJM நிறுவன உரிமையாளர் இமானுவேல் வசந்தகுமார் கலந்துகொண்டு இந்தியா இயற்கையாகவே பல வளங்களை உள்கட்டமைப்புடன் கொண்ட நாடு. சீனா போன்ற உள்கட்டமைப்பு வசதி இல்லாவிட்டாலும் அந்நாட்டின் மக்கள் கடின உழைப்புடன் உற்பத்தியினை அதிகபடுத்தி அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிய உருவாக்குகின்றனர். நம் நாட்டில் வசிக்கும் மக்களாகிய நாம் நம் நாட்டின் இயற்கை வளங்களால் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை பயன்படுத்தி நமது நாட்டிற்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து அதன் மூலம் நமது நாட்டை உலக வல்லரசு நாடாக உருவாக்குவது உங்களை போன்று பொறியியல் துறை மாணவர்களின் கையில் உள்ளது என்று கூறினார்.

நன்றியுரை வேதியியல் துறை துணைப் பேராசிரியர் சிவபாலன் வழங்கினார். இக்கருத்தரங்கில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.அழகிய மீனாள், இயற்பியல் துறைத் தலைவர் சேக்பரீத், வேதியியல் துறைத்தலைவர் முனைவர். தாவீது ராஜா, கட்டிட கலைவியல் துறைத்தலைவி முனைவர்.முத்து சோபா மோகன், வேதி பொறியியல் துறைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியர் ரேகா மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..