ஐக்கிய அரபு அமீரகத்தில் மாபெரும் சிறப்பு கருத்தரங்கம்.

இன்று (09-02-2017) ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடத்ப்படுகிறது. இந்தக் கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர். K.M காதர் மொகிதீன், இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சி அபுதாபி கேரளா சமூக நல மையம் – Kerala Social Centre அரங்கில் (மதினா ஜாயில் ஷாப்பிங் மால் எதிரில்) மாலை 07.00 மணி முதல் நடை பெறுகிறது.

இன்று காலை துபாய் விமான நிலையத்தில் தாயகத்தில் இருந்து வருகை தந்த தலைவருக்கு அமீரக காயிதே மில்லத் நிர்வாகிகள் சார்பாக சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.