கீழக்கரை நகருக்குள் குடிநீர் கொண்டு வரும் வாகனங்களுக்கு சுகாதார சோதனை..

கீழக்கரை நகராட்சிக்குள் தினமும் பல் வேறு வகையான வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. உதாரணமாக லாரி, மாட்டு வண்டி, சிறு கனரக வாகனம் என்று பல வழியில் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரும் வாகனங்களை நகராட்சி ஊழியர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி கலக்கப்படுகிறது.

இதுபற்றி கீழக்கரை நகராட்சி சுகாதார அலுவலர் திண்ணாயிரமூர்த்தி கூறியதாவது கீழக்கரையில் பல வகையான தொற்று நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணம் குடிநீர் ஆகும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊருக்கு தண்ணீர் கொண்டு வரும் லாரிகளை அதன் சுகாதாரத் தன்மை சோதிக்கப்பட்டு குடிநீருக்கான கிருமி நாசினி சேர்க்கப்பட்டு ஊருக்குள் அனுப்பப்படுகிறது என்று தெரிவித்தார். கீழக்கரையின் இந்த செயல்பாட்டை கீழை நியூஸ் நிர்வாகக்குழு பாராட்டுகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..