கீழக்கரை நகராட்சி சார்பாக ஹமீதியா பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கீழக்கரை நகரை திறந்த கழிப்பறையற்ற நகரமாக ஆக்குவது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (09-02-2017) காலை 11.00 மணியளவில் ஹமீதியா தொடக்கப்பள்ளி மற்றும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சி சுகாதார அலுவலர் திண்ணாயிரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திறந்த வெளி கழிப்பறையால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் பற்றியும் மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஊழியர்கள் ஹாஜா, சக்தி, மனோகரன் மற்றும் பள்ளிக் கூடத்தின் ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.