ஓட்ஸ் இட்லி ரெடி..

*ஓட்ஸ் இட்லி*

*🔸தேவையானவை:*

🔹ஓட்ஸ் – ஒரு கப் 🔹ரவை – ஒரு கப் 🔹தயிர் – அரை கப் 🔹தண்ணீர் அல்லது மோர் – முக்கால் கப் (தேவைபட்டால் அதிகரித்துக் கொள்ளலாம் ) 🔹பெருங்காயம் – சிறிதளவு 🔹கொத்தமல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 🔹 சமையல் சோடா – அரை டீஸ்பூன் 🔹எண்ணெய் அல்லது நெய் – தேவையன அளவு 🔹உப்பு – தேவையான அளவு 🔹கேரட் , துருவிய பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி – தேவையான அளவு 🔹பச்சை மிளகாய் பேஸ்ட் – தேவையான அளவு 🔹எண்ணெய் – தேவையான அளவு 🔹கடுகு – 2 டீஸ்பூன்

*செய்முறை :*

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் , ஓட்ஸைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் நன்றாக வறுத்து ஆற வைத்து , மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் ரவையை போட்டு மணம் வரும் வரை வறுத்து ஆற வைத்து, ஓட்ஸ் பொடியுடன் கலந்து வைத்து கொள்ளவும். அடுப்பில், ஒரு கடாயை வைத்துச் சூடானதும் எண்ணெய் ஊற்றி , அதில் கடுகு போட்டு வெடித்ததும் துருவிய கேரட் , பீன்ஸ் , பச்சை பட்டாணி , பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து , அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும் . இதனை ஓட்ஸ் , ரவை கலவையில் சேர்த்து , கூடவே பெருங்காயம் , உப்பு , பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை , சமையல் சோடா , தயிர் , தண்ணீர் அல்லது மோர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும் . பிறகு , வழக்கமான இட்லி ஊற்றுவது போல் வேக வைத்து எடுத்தால் , ஓட்ஸ் இட்லி ரெடி .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.