கீழக்கரையில் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி 28 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 02.02.2017 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மாணவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசு பெற்றவர்கள் விபரம் கீழே:-

பேச்சு போட்டி

முதல் பரிசு.           :- எம்.முஹம்மது காசிம்

இரண்டாம் பரிசு  :- என். விக்னேஷ்

மூன்றாம் பரிசு      :- எஸ் முஹம்மது சுலைமான்

                                   எஸ் செய்யுல்லா

கட்டுரை போட்டி

முதல் பரிசு             :-   ஏ. நிலோபர்.

இரண்டாம் பரிசு   :-  பி. சாணக்கியன்

மூன்றாம் பரிசு       :-  ஏ. செய்யது இபுராஹிம் பாதுஷா.

இந்த நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அலாவுதீன் தலைமை ஏற்றார். முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் முஹைதீன் முன்னிலையில் நாட்டு நல திட்ட அலுவலர் பேராசிரியர் பாலசுப்ரமணியம் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கே.சங்கர் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் மூன்று வகையான சாலை விதிகள் குறித்த சின்னங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார். கிராஸ் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட துணை தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன், சேர்மன் சண்முக ராஜேஸ்வரன், துணை சேர்மன் ஹாரூன், கல்லூரியின் துணை முதல்வர் கமால் அப்துல் நாசர், மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் ராக்லாண்ட் மதுரம், பொருளாளர் குணசேகரன், ஆயட்கால உறுப்பினர் அப்பா மெடிக்கல் சுந்தரம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் பேராசிரியர் எபன் பிரவீன் குமார் நன்றி தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

Comments are closed.