Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் மீண்டும் சீம கருவேல மரங்களை அகற்ற ஏலம் தொடங்கியது..

கீழக்கரையில் மீண்டும் சீம கருவேல மரங்களை அகற்ற ஏலம் தொடங்கியது..

by ஆசிரியர்

கீழக்கரையில் இன்று (04-02-2017) மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற அடுத்த கட்ட ஏலம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது. இந்த ஏலம் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், கீழக்கரை ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் ஏலம் நடை பெற்றது.

கீழக்கரை தாலுகா கோட்டத்தில் எக்கக்குடி, பனைக்குளம், ஆலங்குளம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி, இதம்பாடல், பெரியப்பட்டினம், ரெகுநாதபுரம் உள்ளிட்ட சரக ஊராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துக்களுக்கான இந்த ஏலத்தில் கீழக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி கிராம நிர்வாகத்தினரும், அந்தப் பகுதிகளைச் சார்ந்த மக்களும் ஏலத்தில் பங்கேற்றார்கள். ஏலத் தொகைகள் ஏற்கனவே முறைப்படி அறிவிக்கபட்டு ஏலம் நடத்தப்பட்டது.

சமீபத்தில் இராமநாதபுர ஆட்சியருக்கு நீதிமன்றம் கண்டிப்புடன் குற்றம்சாட்டியதால் இராமநாதபுர மாவட்டம் முழுவதும் கருவேல மரம் அகற்றுவதற்கான ஏலம் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!