ஆலந்தூர் வாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் சார்பாக குடியரசு தின வாழ்த்து…

சென்னை ஆலந்தூர் மற்றும் ஆதம்பாக்கம் பகுதி வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சார்பாக குடியரசு தின நலவாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது வர்தா புயலால் செடிகளையும் மரங்களையும் இழந்த பொதுமக்களுக்கு மரகன்றுகள் , பழ மரகன்றுகள் மூலிகை செடிகள் மற்றும் கொசுவிரட்டி (துளசி ) செடிகளும் கொடுக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பு அழைப்பாளர்காளாக திரு. செல்வின் சாந்தகுமார் ஆய்வாளர் S1- காவல் நிலையம் , S.ஜிந்தா மதார் காஞ்சி மாவட்ட வடக்கு செயலாளர், மனித நேய ஜனநாயக கட்சி , S.முஹம்மது பிலால் காஞ்சி மாவட்ட தலைவர் SDPI , S. ஜாகிர் உசேன், மாநில செயலாளர் JAQH,A. முகம்மது சாதிக்,மாநில துணைத் தலைவர் MWWX, J. ஜின்னா, ஆலந்தூர் மதிமுக,  செயலாளர், M. சையது அபுதாகிர், திமுக,  M. கமால் முகம்மது, அதிமுக, Er. அப்துல் நாசர், தலைவர்,ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், ஆலந்தூர், M.S.அன்சாரி,நகர தலைவர், தமிழ் மாநில கட்சி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதே ஆலந்தூர் தொகுதியில் இஸ்லாம் அல்லாத பிற சகோதரர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் வகையில் இலவசமாக திருமறைக் குர்ஆன் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.  அந்நிகழ்ச்சியில் INTJ இமாம்.கமாலுதீன் மன்பஈ, JAQH இஸ்லாமிய அழைப்பாளர். தரவேஸ் ஹஸனி, மஸ்ஜிதே தய்யிப்.M.Z அன்சாரி, SDPI S. அன்சாரி, S. ஆலிம், திமுக, வட்ட பிரதிநிதி, K.ஃபாரூக் மரைக்காயர்-மஜக, திவான் முகைதீன்-INTJ, ஐ.லியாகத் அலி-ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், R.ரிஸ்வான்,தமிழ் மாநில கட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.