கீழக்கரை நகராட்சியில் சீமைக் கருவேல மரம் ஏலம் நடைபெற்றது

கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமை கருவேல மரம் ஏலம் சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.  அது தொடர்பாக கீழை நியூஸ் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டு இருந்தோம் http://keelainews.com/karuvelamtender-190117-01/

அதைத் தொடரந்து இன்று கீழக்கரை நகராட்சி ஆணையர் சந்திரசேகர் (பொறுப்பு) முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.  அந்த ஏலத்தில் இராமநாதபுரத்தில் இருந்து தமிழ்நாடு சீமைக் கருவேல மர ஒழிப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் முகம்மது யூசுஃப் அலியும் பங்கேற்றார். இன்று நீதிமன்றம் கருவேலமரங்களை வேரோடு ஒழிக்க தீர்ப்பு வழங்கியத்தில், இந்த இயக்கம் தொடுத்த வழக்கு முக்கியமான ஒன்றாகும்.

கீழக்கரையில் நடத்தப்பட்ட ஏலத்தின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை, ஆனால் கருவேல மரத்தின் தீமையை ஆழமாக அறிந்த இயக்கங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் ஏலத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேற வாய்ப்பிருக்கிறது.  கீழை நியூஸ் இணையதளம் தமிழ்நாடு சீமைக் கருவேல மர ஒழிப்பு இயக்கத்தின் பணிகள் வெற்றி பெற வாழ்த்துகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..