வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்..

கீழக்கரையில் இன்று (26-01-2017) குடியரசு தின விழா தேசியக் கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாட பட்டது.

அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வனத்துறை உயர் அதிகாரி சிக்கந்தர் பாதுஷா கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார்.  அவருடன் அத்துறையைச் சார்ந்த ஐந்து அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.  மேலும் அவருடைய உரையில் இளம் சமுதாயத்தினருக்கு பயனளிக்கும் விதமாக முத்தாய்பப்பாக சில கருத்துக்களை பதிந்தார்.

அவருடைய உரையில் சமீபத்தில் இளைய சமுதாயத்தினரால் அறவழியில் நடத்தப்பட்ட போராட்டத்தைப் பாராட்டி காந்தியடிகளின் போராட்டத்தை மேற்கோள் காட்டி விளக்கினார். மேலும் கடல் அட்டைகளை அரசின் அனுமதி இல்லலாமல் பிடிப்பது குற்ற செயல் என்றும் அதை உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை என்பதையும் சுட்டிகாட்டினார். அதுபோல் மரங்களின் அவசியத்தையும், அதை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு விளக்கினார்.

மேலும் நிகழ்ச்சியில் வடக்குத் தெரு ஜமாத் தலைவர். ரத்தினா முகம்மது, முகைதீனியா பள்ளி கலவிக்குழு செயலாளர். ராசிக்தீன், கல்விக்குழு துணைத்தலைவர். MMS. முகைதீன் இபுராஹீம், கல்விக்குழு பொருளாளர். சேகு பசீர் அகமது மற்றும் வடக்குத் தெரு ஜமாத் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..