தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது..

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவர் மற்றும் சமூக நீதி பத்திரிக்கையின் ஆசிரியருமான CMN  சலீம் நம் இஸ்லாமிய சமுதாய மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை தமிழகம் மற்றும் அல்லாமல் உலகத்தில் உள்ள பல பகுதிகளில் நடத்தி வருகிறார். அவரின் உயரிய முயற்சியால் தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமிய கல்வி மையங்கள் ஆரம்பிக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

CMN.சலீம் பைத்துல் ஹிக்மா (BAITHUL HIKKMAஞானத்தின் வீடு) என்ற பெயரில் புதுச்சேரியில் இஸ்லாமி கல்வி சார்ந்த பல்கலைக் கழகம் ஆரம்பம் செய்து அதற்கான சேர்க்கைகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் அதே சமயம் நம் தமிழ் இஸ்லாமிய சமுதாயம் கல்வியின் முக்கியம் அதனால் வரக்கூடிய தலைமுறைகள் அடையப் போகும் பயன்களை புரிந்து கொள்வதில் இன்னும் பின் தங்கியே உள்ளார்கள் என்றால் மிகையாகாது.  அவர்களின் அறியாமை போக்கி கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாமிய சமுதாய மக்களிடையே எத்தி வைக்கும பொருட்டு தொடர் பிரச்சாரத்தில் CMN சலீம் ஈடுபட்டு வருகிறார்.

 அதன் தொடர்ச்சியாக இந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நம் சமுதாய மக்கள் அதிகமாக வாழும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள பல பகுதிகளில் இஸ்லாம் சார்ந்த உலக கல்வியின் முக்கியத்துவம் பற்றி உரையாற்ற இருக்கிறார். நிச்சயமாக இந்த நிகழ்ச்சி நம் சமுதாய மக்களுக்கு நன்மை பயக்க கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியின் விபரங்கள் கீழே:-

ஐக்கிய அரபு அமீரகம்:-


27-01-2017 – வெள்ளிக்கிழமை.
நேரம்:- மாலை 07.00 மணியளவில்,  துபாய் அல்கிசஸ்,  கிரஸண்ட் பள்ளி
சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.
தலைப்பு:- குடியரசு இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை.

30-01-2017, 31-01-2017 மற்றும் 01-02-2017 மூன்று நாட்கள் கல்வி பயிலரங்கம் – திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமை.
நேரம்:- இஷா தொழுகைக்கு பின்; துபாய் அல்முதினா,  ஹோட்டல் சிந்து தர்பார்.
சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.
தலைப்பு:- இஸ்லாமிய கல்வி வரலாறு.
03-02-2017 – வெள்ளிக்கிழமை
நேரம் – இரவு 7 மணியளவில். இஸ்லாமிக் சென்டர், அபுதாபி
கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்,  தலைப்பு: பொற்காலம் திரும்பட்டும்.

06-02-2017, 07-02-2017 மற்றும் 08-02-2017 மூன்று நாட்கள் கல்வி பயிலரங்கம் – திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமை
நேரம்:- இஷா தொழுகைக்கு பின்; அபுதாபி.
சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.
தலைப்பு:- இஸ்லாமிய கல்வி வரலாறு.

10-02-2017 – வெள்ளிக்கிழமை
நேரம் – இரவு 7 மணியளவில், கிரஸண்ட் பள்ளி, துபாய் அல்கிசஸ்
கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
தலைப்பு: நாளைய உலகம் நமதாகட்டும்

சவுதி அரேபியா:-

17-02-2017 (20-04-1438) – வெள்ளிக்கிழமை.
நேரம்:  மாலை 04.30 மணியளவில்.
இடம்: மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவரங்கம் நோஃபா இஸ்திராஹா
Exit, 18C,  அல் கர்ஜ் சாலை, RIYADH
தலைப்பு: பொற்காலம் திரும்பட்டும்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..