Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் திமுக சில கட்சிகளுடன் இணைந்து ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்..

கீழக்கரையில் திமுக சில கட்சிகளுடன் இணைந்து ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்..

by ஆசிரியர்

ஜல்லிக்கட்டுக்கு கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடம் கொடுக்காமல் உலகம் முழுவதுமாக கண்டன குரல்களை எழுப்பி வருகிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகளோ தங்களுடைய இடங்களை தக்க வைக்கும் பொருட்டு ரயில் மறியல் சாலை மறியல் போன்ற மக்களுக்கு தொல்லை தரக்கூடிய போராட்டங்களை ஆரம்பித்து பல இன்னல்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதன் விளைவு குழந்தைகளுடன் பயணம் செய்த பெண்மணிகள் இடையில் இறக்கிவிடப்பட்டார்கள். வெளிநாட்டுக்கு பயணம் செய்த பயணிகள் பயணம் செல்ல முடியாமல் வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால் இதற்கும் மாணவர்கள் நடத்தும் அறவழிப்போராட்டத்துக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதை பொதுமக்கள் நன்றாகவே அறிந்துள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. அரசியல் கட்சிகள் போராட்டத்தை கையில் எடுக்காத வரை பொதுமக்கள் எந்த ஒரு இன்னல்களுக்கும் ஆளாகவில்லை என்பதுதான் உண்மை.

இன்று கீழக்கரையில் திமுக தலைமையில் போராட்டம் என்று அறிவித்தவுடன் கீழக்கரையிலும் இன்னல்கள் ஏற்படுமோ என்ற பதட்ட எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த ஓரு சம்பவங்களும் ஏற்படாமல் திமுக தலைமையில் சில கட்சிகளின் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், கல்லூரி மாணவர்களுக்கும் ஆதரவு தெரிவித்து ஊர்வலத்துடன் போராட்டம் நிறைவடைந்தது.

இந்த போராட்டத்திற்கு திமுக நகர் தலைவர் SAH. பஷீர் தலைமை தாங்கினார். கண்டன உரை நகர் காங்கிரஸ் A. ஹாமீது கான் மற்றும் அவரைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட பிற கட்சிகளாகிய மனித நேயக் கட்சி, CPM, விடுதலை சிறுத்தை, SDPI, IUML, மதிமுக,தேமுதிக,தா மா க, மருந்து வணிக சங்க தலைவர் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக மக்கள் டீம் காதர் நன்றியுரை வழங்கினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!