கீழக்கரையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஏல அறிவிப்பு..

கீழக்கரை பகுதியில் சீமைக் கருவேல மரங்களை கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக நல அமைப்புகள் பல பகுதிகளில் அகற்றி வருகின்றனர். ஆனால் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சமூக அமைப்புகளால் அகற்ற முடியாத அளவில் பெருவாரியான பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. அதை அகற்றும் பணியினை இப்பொழுது நகராட்சி நிர்வாகம் முயற்சிகள் எடுத்து வருகின்றனர், அதன் அடிப்படையிலேயே தற்பொழுது சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான ஏல அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏல அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வார்டு எண் 2 இந்துக்கள் மயானம், கிருஸ்துவ மயானம் வார்டு எண் 3 பெத்திரி தெரு மீனவர் குப்பம் அருகில் மற்றும் வார்டு எண் 15 கோல்டன் பீச் அருகில் உள்ள மயானம் ஆகிய பகுதியிலேயே மிக அதிக அளிவிளான அடர்த்தியான சீமைக் கருவேல மரங்கள் கிட்டதட்ட 8 ஹெக்டேர் அளவுக்கு மண்டி கிடக்கின்றன, இப்பகுதியில் உள்ள மரங்களை அகற்றினாலே கீழக்கரையில் உள்ள நிலத்தடி நீர் வளத்தை காப்பாற்றுவதற்கான வழி உண்டாகும்.

தற்சமயம் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை தூருடன் அகற்ற ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் 27-01-2017ம் தேதி காலை 11.30 மணியளவில் ஆணையர் முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்படும். அதற்கான பிணைத் தொகை மற்றும் வைப்புத் தொகையை செலுத்தி பொதுமக்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி விபரங்களுக்கு கீழக்கரை நகராட்சி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

To Download Keelainews Android Application – Click on the Image