துபாயில் இரத்ததான முகாம்.. ஈமான் அமைப்பு ஏற்பாடு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒன்று ஈமான் அமைப்பாகும். அவ்வமைப்பு மூலம் பல சமுதாயம் மற்றும் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகள் துபாயில் நடத்தப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை (20-01-2017) அன்று 68 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய தூதரக அதிகாரி நிர்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இம்முகாம் துபாய் தேரா சலாஹுதீன் சாலையில் அமைந்துள்ள அஸ்கான் குழும வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி சம்பந்தமான விபரங்களுக்கு 055-3004789, 050-5196533 மற்றும் 052-7778341 என்ற அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்..