சென்னை தானிஷ் பொறியியல் கல்லூரி உருவாக்கிய கணித மேதைகள்..

தமிழகத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் முன்னனி கல்லூரிகளில் Dhaanish Ahmed College of Engineering முக்கியமான ஒன்றாகும். அக்கல்லூரியின் சார்பாக கடந்த நான்கு வருடமாக மாவட்டம் முழுவதிலும் +2 முதல் பிரிவு மாணவர்களுக்கு Younger ramanujam என்ற தலைப்பில் கணித தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக 2016-17 ஆண்டுக்கான தேர்வு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 45க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை எட்டிப் பிடித்த மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சான்றிதழ் மற்றும் காசோலை பரிசாக வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்களின் விபரங்கள்:-

1.முதல் பரிசு ரூ2500 மற்றும் சான்றிதழ் Al hilal Matriculation School, Thondi பள்ளியைச் சர்ந்த மாணவி. பசிபாவுக்கு வழங்கப்பட்டது.

2.இரண்டாம் பரிசு ரூ1500 மற்றும் சான்றிதழ் Mela Pallivasal School,  Ilayangudi சார்ந்த மாணவி.சித்தி இர்ஃபானீவுக்கு வழங்கப்பட்டது.

3.மூன்றாம் பரிசு ரூ750 மற்றும் சான்றிதழ் Government Girls School, Sayalgudi சார்ந்த மாணவி கௌசல்யாவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளை Dhaanish Ahmed College of Engineering கல்லூரி ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜுபைர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.  சிறப்பு விருந்தினராக Dhaanish Ahmed College of Engineering யின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி (PRO) ரஜினி கலந்துகொண்டு பரிசினை வழங்கி சிறப்பித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..