ப்ளஸ் 2 மாணவர்களுக்கான வெற்றி நமதே வழிகாட்டி கருத்தரங்கம் தொடங்கியது..

கீழக்கரையில் இன்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான  “வெற்றி நமதே” நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் மிகச் சிறப்பான முறையில் காலை 10.30 மணியளவில் தொடங்கியது.    

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் SM.  யூசுப் தலைமை தாங்கினார்.  இயக்குனர் PRLA  ஹாமீது இபுராஹிம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் E. ரஜபுதீன்  வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஹமீதியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவாஹிர் ஃபாரூக் திருவரங்கம் புனித தல மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை கணித ஆசிரியர் M லாசர் காடரந்தங்குடி மேல்நிலைப்பள்ளி முதுநிலை இயற்பியல் ஆசிரியர் B வேல்முருகன் கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியம் பன்னீர் செல்வம் மற்றும் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் RD நெல்சன் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மேல் நிலைக் கல்வி பற்றிய ஆலோசனை மற்றம் விழிப்புணர்வு சொற்பொழிpவு ஆற்றினார்கள்.

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் J முகம்மது ஜகுபர் மற்றும் டாக்டர் J அப்பாஸ் முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்த 1200கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக முதுகலை வணிகயவியல்  துறைத் தலைவர் டாக்டர் P பாலக்கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்;ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக வேதியல் துறைத் தலைவர் A அப்துல் சர்தார் நுண்ணுயிரியல் துறைத்த தலைவர் டாக்டர் M ஆனந்த் மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் RD  நெல்சன் டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.  இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் பிற துறைசார்ந்த வல்லுனர்களுடன் தொடரும் என்று அறியப்படுகிறது.

   

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. கீழக்கரை சேர்ந்த படித்த பெண்கள் , மற்றும் ஆண்கள் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர் , கீழக்கரையில் , படித்த ஏழை பெண்கள் சரியான ஒரு தொழில் இல்லாமல் அதிகமா படித்தும் படித்த படிப்பினால் எந்த ஒரு பயனும் இல்லாமல் இருக்கிறார்கள் , கீழக்கரையில் முக்கியமா பெண்களுக்கு பெண்கள் ஆசிரியர் பயற்சி கல்லூரி தொடங்க,வசதி படைத்தவர்கள் முன் வர வேண்டும் ,கீழக்கரையில் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு கீழக்கரை சேர்ந்த ஏழை பட்டதாரியான பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி செய்ய முன்வர வேண்டும் ,, கீழக்கரை சேர்ந்த மாணவர்கள் அரசு வேலை வாய்ப்பு பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் , ஏன் என்றால் நாம் ஊரு மக்கள் அரசு துறையில் குறைந்த நபர்களே பணி செய்கிறார்கள் , நம்ம ஊரு மாணவர்களுக்கு அரசு பணி மற்றும் அரசு உயர் பணி கள் பன்றியை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ,அரசு தேர்வு பயற்சி வகுப்புகள் நடத்த பட வேண்டும்

Comments are closed.