கீழக்கரை ”சட்ட விழிப்புணர்வு பிக்னிக்”  மற்றும் சட்ட பயிற்சி வகுப்பு 

கீழக்கரை மக்கள் களம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி 01.01.2017 ஞாயிறன்று மதியம் 2.30 மணியளவில் செங்கல் நீரோடை பகுதியில் ‏உள்ள கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை நிர்வாகி சகோதரர் அபு தென்னந்தோப்பில் சிறப்பாக நடைபெற்து. இந்த நிகழ்ச்சியை கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை தலைவர் ஆசிக் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். கீழக்கரை மக்கள் களத்தின் துணை தலைவர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் சட்ட விழிப்புணர்வு பயிற்சி அளித்தார்.

 

இந்த நிகழ்ச்சிச்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அறிமுக உரையையும், RTI சட்டத்தின் அத்தியாவசத்தையும், அந்த சட்டத்தின் மூலம் நம் கீழக்கரை நகருக்கு கிடைக்கும் நன்மைகளையும் எடுத்துக் கூறி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பில் சமூக அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள், சமூக ஆர்வலர்கள், கீழக்கரை முஸ்லீம்  அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை செயலாளர் இஸ்மாயில் மற்றும் பொருளாளர் அமான் ஆகியோர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

கீழக்கரையில் பொழுது போக்குக்கு பிக்னிக் செல்லும் நிகழ்வுகளுக்கு இடையே, இது போன்ற அற்புதமான நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கீழக்கரை நகரில் தற்போது இளைஞர்கள் மற்றும் இளைய  தலை முறையினர் மத்தியில் ஏற்பட்டு வரும் சட்ட விழிப்புணர்வு மற்றும் அரசியல் விழிப்புணர்வால், கீழக்கரை நகரம் நல்லதொரு மாற்றத்தை வரவேற்க தயாராகி வெற்றி பாதையையை நோக்கி தன் கால் தடங்களை பதிக்க தயாராகி விட்டது என்றே கூறலாம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..