வெற்றி நமதே +2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்…

கீழக்கரையில் 04.01.2017 மற்றம் 05.01.2017 ஆகிய இரண்டு நாட்கள் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வெற்றி நமதே எனும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் பல பாட வல்லுனர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள்.  இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.