வட்டியில்லா கடன் திட்டம்.. மக்களை நரகிலிருந்து காப்பாற்றும் திட்டம்.. நாசா அறக்கட்டளையின் கனவு திட்டம் இன்று நிஜமாகியது.. மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டது..

கீழக்கரை வடக்குத் தெருவில் இன்று (30-12-2016) வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை சார்பாக வட்டியில்லா கடன் திட்டம் அறிமுக விழா வடக்கு தெரு முகைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் மாலை 05.00க்கு ஆரம்பம் ஆனது. நிகழ்ச்சி குர்ஆன் கிராத்துடன் ஆரம்பம் ஆனது. நிகழ்ச்சியை திட்டத்தின் செயலாளர் முஜம்மில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

வரவேற்புரையை வடக்கு தெரு சமூக நல அமைப்பின் துணைத் தலைவர் சகோ.ஃபர்ஹான் பின் அஷ்ரப் வழங்கினார்.

வட்டியில்லா கடன் திட்டத்தைப் பற்றிய அறிமுகவுரையை திட்டத்தின் ஓருங்கிணைப்பாளர் மஃக்ரூப் வழங்கினார்.

நிகழ்ச்சியின் முன்னுரையை அறக்கட்டளையின் செயலாளர் முஜம்மில் திட்டம் கடந்து வந்த பாதையை சுருக்கமாக விளக்கினார். துவக்கவுரையை நாசாவின் உறுப்பினர் இஜாஸ் முகம்மது வழங்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நன்மையின் பக்கம் முன்னேறுவோம் என்ற தலைப்பில் மதரசா மாணவர்கள் வட்டி குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

பெண்களுக்கான சிறப்பு பேச்சாளர் தாஜ்நிஷா பேகம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், திருக்குர்ஆனில், பெண்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் முன்னாள் ஆசிரியர் சமரசம் பத்திரிக்கை, மாநில தலைவர் Welfare Party of India S.N.சிக்கந்தர், நபி(ஸல்) ஏற்படுத்திய முன்மாதிரி பொருளாதரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரையை நாசா அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் மஃக்ருப் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிற்ப்பித்தனர்.

இந்த திட்டத்திற்கான நிரந்தர அலுவலகம் மற்றும் அலுவலர் நாசா சங்க அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேல் விபரங்களுக்கு அலுவலகத்தை அணுகினால் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று திட்டத்தின் நிர்வாகிகள்
தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மதரஸா மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த PEACE கண்காட்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

 

 

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

1 Comment

  1. அல்ஹம்துலில்லாஹ்
    எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

Comments are closed.