சரித்திரம் கூறும் கீழை பெயரை கீழாக நினைக்கும் நேரத்தில், கீழக்கரை சிறிய மழைக்கும் தாழ்ந்து போகும் அவல நிலை.

கீழக்கரையில் நேற்று இரவு சிறிது நேரம் மழை பெய்தது, மனதுக்கு இதமாக இருந்தது ஆனால் காலையில் சாலையில் இறங்கினால் மன வேதனையை தந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே கீழை செய்தியில் சாலை ஒப்பந்தக்காரர்கள் சரியான முறையில் சாலைகள் போடப்படாத காரணத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சுட்டி காட்டி செய்திகள் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று கீழக்கரையில் உள்ள மேலத் தெரு, நெய்னா முஹம்மது தண்டையார் தெரு மற்றும் சின்னக்கடை தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் கழிவு நீரும் மழை நீரும் கலந்து மக்கள் மூச்சை அடக்கி நடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது 

கீழை நகரில் ஓரு புறம் மேம்பாட்டு திட்டத்திற்காக பல கோடி ரூபாய் செலவு செய்ய ஆலோசனை, அதற்காக சாலைப் பணிகள் முன்னோடி என்று குறிப்பிடப்படும் பொழுது, இந்தப் பணிகள் தரமானதாக, தகுதியுள்ளவர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டதா என்பதையும் கீழக்கரை வளர்ச்சி திட்டத்திற்காக பாடபடுபவர்கள் மனதில் கொள்ள வேண்டும், அதை கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் மீண்டும் கோடி கணக்கான பணம் சில சுயநலவாதிகள் நலனுக்கே உதவக்கூடியதாகி விடும்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image