இப்படியும் ஊக்குவிக்கலாம் மதரஸா சிறார்களை.. அனைத்து மாணவர்களையும் வெற்றியாளர்களாக உருவாக்கும் அல் மதரஸத்துல் முஹம்மதியா .

கீழக்கரை வடக்குத்தெருவில் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா என்ற இஸ்லாமிய பாட சாலை கடந்த பல வருடங்களாக ஓசையில்லாமல் இஸ்லாமிய அறிவை சிறுவர்களுக்கு போதித்து வருகிறது. இந்த பாடசாலை வடக்கு தெருவில் பல மார்க்கம் மற்றும் சமுதாய பணிகள் செய்து வரும் வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) கீழ் இயங்கி வருவது என்பது கூடுதல் தகவலாகும். இங்கு 1. அடிப்படை ( Basic), 2. பட்டயப்படிப்பு ( Diploma) மற்றும் 3. காலை நேர வகுப்பு ( Morning class) என மூன்று வகையான பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக காலை நேர வகுப்பில் குர்ஆன் மனனம் செய்வது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

img_2656

இந்த மதரசாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் மாதம் தோறும் பரிசுகள் வழங்கப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் என முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்று பரிசு வகையான பரிசுகள் வழங்கப்படுகிறது. img_2653மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்திலும் சிறந்து வழங்கும் சிறார்களின் பெற்றோர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பான விசயமாகும். டிசம்பர் மாதத்திற்கான பரிசு வழங்கும் விழா நேற்று (26-12-2016) நடைபெற்றது. இதில் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

img_2654
இதைப்பற்றி இப்பள்ளியின் தலைமை நிர்வாகியும், சிறந்த மார்க்க கல்வியாளரான சகோ.ஆஷிஃப் கூறுகையில் இந்த பள்ளியில் மாணவர்கள் எல்லா வகையிலும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றும், பள்ளிக்கூட விடுமுறைகளுக்கேற்ப மதரசாவின் நேரங்களுக்கு மாணவர்களின் மாற்றியமைத்து வசதி செய்து கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

img_2659

குறைவான வசதியில் இதுபோன்ற நிறைவான பணிகளை செய்வது அனைவரின் பார்வையிலும் இம்மதரஸா உயர்ந்தே நிற்கிறது. இன்னும் பொருளாதாரம் மற்றும் பிற வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதரசா பல சாதனைகள் புரிய வாய்ப்பிருக்கிறது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

1 Comment

Comments are closed.