நட்புடன் வரவேற்கும் கீழக்கரை காவல் நிலையம்…

கீழக்கரை காவல்நிலையத்தில் வரவேற்பாளர்கள்…

தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் அவர்கள் அனைத்து காவல்நிலையத்திலும் வரவேற்பாளர்களை நியமிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.இதனை தொடர்ந்து இராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் அனைத்து காவல்நிலையத்தில் உள்ள (4) காவலர்களுக்கு வரவேற்பாளர் பயிற்சி அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து கீழக்கரை காவல்நிலையத்தில் 24 மணிநேரமும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் வருகின்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களது பிரச்சனை,முகவரி,செல் நம்பர் ஆகியவை பெற்ப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மேலும் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ கள் வெளியே சென்றால் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தற்சமயம் இப்பணியில் வரவேற்பாளராக தனசேகரன் நியமிக்க்ப்பட்டுள்ளார்.இது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image